Published On: Wednesday, December 28, 2011
ஸ்ரீலங்கா ஓபன் கோல்ஃப் சம்பியன்சிப் போட்டி
கெட்டர்பில்லர் தயாரிப்புகளை இலங்கையில் விநியோகிக்கும் ஏக விநியோகத்தர்களான UTE நிறுவனம் எதிர்வரும் 2012 ஆம் வருடம் ஜனவரி மாதம் 2 ஆம் திகதி முதல் 6 ஆம்திகதி வரை நடைபெறவுள்ள ஸ்ரீலங்கா ஓபன் கோல்ஃப் சம்பியன்சிப் போட்டிகளுக்கு அனுசரணை வழங்க முன்வந்துள்ளது. இந்தப் போட்டித்தொடர் இலங்கை கோல்ஃப் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்வுக்கு UTE - CAT ஸ்ரீலங்கா ஓபன் கோல்ஃப் சம்பியன்சிப் என பெயரிடப்பட்டுள்ளது.
இந்த UTE - CAT ஸ்ரீலங்கா ஓபன் கோல்ஃப் சம்பியன்சிப் போட்டிக்கு சமாந்தரமாக மேலும்ஆண்களுக்கான போட்டி மற்றும் பெண்களுக்கான பேம் பெர்னான்டோ ஞாபகார்த்த போட்டியும் ஜனவரி 4 மற்றும் 5 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. UTE - CAT ஸ்ரீலங்கா திறந்த போட்டியில் வெற்றி பெறும் நபர் 2011 ஆம் ஆண்டுக்கானஇலங்கையின் சிறந்த கோல்ஃப் வீரராக தெரிவு செய்யப்படுவார்.
இந்த அனுசரணை குறித்து UTE குழுமத்தின் தலைவர் பிரியத் பெர்னான்டோ கருத்து தெரிவிக்கையில், "எமது நிறுவனம் இந்த கோல்ஃப் விளையாட்டுடன் நெருங்கிய தொடர்பைகொண்டுள்ளது. இலங்கையின் முன்னாள் சிறந்த கோல்ஃப் வீரராக தெரிவு செய்யப்பட்டிருந்தவர் UTE நிறுவனத்தின் முன்னாள் தலைவர் மறைந்த பின்பெர்னான்டோஆவார். நாம் இலங்கையின் கோல்ஃப் விளையாட்டின் வளர்ச்சிக்கு தொடர்ச்சியாகபங்களிப்பை வழங்கி வந்துள்ளோம்" என்றார்.
பேம் பெர்னான்டோ இலங்கையில் கோல்ஃப் விளையாட்டின் முதல் பெண்மணி எனக்கருதப்படுபவர். இவர் இலங்கையின் முன்னாள் கோல்ஃப் சம்பியனான பின்பெர்னான்டோவின் மனைவி என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர் 5 தடவைகள் சிறந்த கோல்ஃப் வீராங்கனை எனும் விருதை வெற்றி கொண்டதன் மூலம் கின்னஸ் புத்தகத்தில் மிகவும் முதிய வயதில் தேசிய கோல்ஃப் விருது பெற்றவர் எனும் நாமத்துடன் இடம்பிடித்துள்ளார். இலங்கை பெண்களிடையேயும், இளையவர்களிடையேயும் கோல்ஃப் விளையாட்டை பிரபல்யமடையச் செய்யும் நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தார்.
இந்த போட்டிக்கு உத்தியோகபூர்வ பான வழங்குநராக கொகா கோலா பீவரேஜஸ் ஸ்ரீலங்காநிறுவனம் முன்வந்துள்ளது. இது குறித்து கொகா கோலா நிறுவனத்தின் இலங்கைக்கானமுகாமையாளர் சௌமிந்திர பட்டாச்சாரியா கருத்து தெரிவிக்கையில் "நாம் இந்த போட்டிக்குஅனுசரணை வழங்குவதையிட்டு பெருமையடைகிறோம். இளம் கோல்ஃப் விளையாட்டுவீரர்களுக்கு சுகாதாரமான வாழ்க்கையின் முக்கியத்துவத்தை நேர்த்தியான முறையில்எடுத்துரைக்கும் வகையில் எமது அனுசரணை அமைந்திருக்கும்" என்றார்.
UTE மற்றும் பின், பேம் பெர்னான்டோ குடும்பத்தினர் இணைந்து இந்த கோல்ஃப் சம்பியன்சிப் விளையாட்டை வருடாந்தம் ஒரு முறை நடைபெறும் நிகழ்வாக தமது நாட்காட்டியில் இடம்பெறச் செய்ய தீர்மானித்துள்ளனர். இதன் மூலம் தொடர்ச்சியாக இளம்கோல்ஃப் திறமைகளுக்கு களம் அமைத்துக் கொடுக்க முன்வந்துள்ளனர். UTE நிறுவனம்றோயல் கொழும்பு கோல்ஃப் கழகத்தின் பின்பெர்னான்டோ கோப்பை போட்டிக்கும்அனுசரணை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.