Published On: Tuesday, December 27, 2011
டெஸ்ட் போட்டிகளில் 8,000 ரன்களை கடந்தார் ஷேவாக்

இந்திய கிரிக்கெட் வீரர் வீரேந்திர ஷேவாக் டெஸ்ட் போட்டிகளில் 8,000 ரன்கள் என்ற புதிய மைல்கல்லை கடந்து உள்ளார். இந்திய அணியில் டெஸ்ட், ஒருநாள், டுவென்டி20 என்று எந்த போட்டியானாலும் அதிரடியாக விளையாடக் கூடியவர் இந்திய வீரர் வீரேந்திர ஷேவாக். ஒருநாள் போட்டியில் அதிக ரன்களை எடுத்தவர், டெஸ்ட் போட்டிகளில் 300 ரன்களை கடந்தவர் உள்ளிட்ட பல சாதனைகளை ஷேவாக் செய்து உள்ளார்.
இந்த நிலையில் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் சென்று உள்ள இந்திய அணி முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகின்றது. இதில் விளையாடிய ஷேவாக், 20 ரன்களை எடுத்த போது டெஸ்ட் போட்டியில் 8,000 ரன்கள் என்ற மைக்கல்லை கடந்தார்.
முன்னதாக இந்திய அணியின் சுனில் கவாஸ்கர், சச்சின், டிராவிட், லட்சுமன் உள்ளிட்ட இந்திய வீரர்கள் 8.000 ரன்கள் என்ற மைல்கல்லை கடந்து உள்ளனர். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 8,000 ரன்களை கடக்கும் 23வது வீரராகவும், இந்திய தரப்பில் 5வது வீரராக ஷேவாக் இடம் பெற்று உள்ளார்.
இதுவரை 93 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ள ஷேவாக் மொத்தம் 8,047 ரன்கள் எடுத்து உள்ளார். இதில் 22 சதங்கள் அடித்து, சராசரியாக 52 ரன்களை வைத்து உள்ளார். உலக அளவில் டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீரர் சச்சின் என்பது நினைவிருக்கலாம்.