Published On: Tuesday, December 27, 2011
வெளியிடப்பட்ட உயர்தரப் பரீட்சை பெறுபேற்றை ஏற்க வேண்டாம்

நீண்ட இடைவெளிக்குப் பின்னர் நாட்டின் ஜனாதிபதி தலையிட்டு 25.12.2011 வெளியிடப்பட்டிருந்த க.பொ.த. உயர்தரப் பரீட்சைப் பெறுபேற்றை மாணவர்கள் ஏற்றுக் கொள்ளக்கூடாது என மாணவர்களின் பெற்றோர்களுக்கு வேண்டுகோள் ஒன்றை அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியம் விடுத்துள்ளது.
பல்வேறு குளறுபடிகள் காணப்படும் இப்பரீட்சையின் மதிப்பீடுகள் மீளவும் செய்யப்பட வேண்டுமெனவும் ஒன்றியம் தெரிவித்துள்ளது. இன்று களனிப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின் போது இக்கருத்தினை வலியுறுத்தி பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அதேவேளை வெளியிடப்பட்டுள்ள பெபேறுகளின் தரவரிசையில் பிழைகள் காணப்படுவதாகவும் பெறுபேற்றைப் பெற்றுக் கொண்ட மாணவர்கள் தமக்குத் தெரிவித்தாகவும் அங்கு தெரிவிக்கப்பட்டது. இதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான சுஜீவ சேனசிங்க கருத்துத் ஊடகமொன்றிக்கு கருத்துத் தெரிவிக்கையில், உயர்கல்வி அமைச்சர் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலைக்கு காரணமாக அதிகாரிகள் காணப்படுகின்றனர். இந்த அதிகாரிகள் பலதடவைகள் இதுபோன்ற தவறுகளை செய்துள்ளனர். இதற்கு அமைச்சர் என்ற வகையில் பதவி விலகவேண்டும் என்றும் கூறியுள்ளார்.