Published On: Friday, December 09, 2011
சம்மாந்துறை விவசாயிகளுக்கு உரமானியங்கள் வழங்கல்

(ஏ.ஜே.எம்.ஹனீபா)
அரசாங்கத்தினால் பெரும்போக நெற்செய்கைக்காக விவசாயிகளுக்கு வழங்கப்படும் உரமானியங்கள் தற்போது துரிதமாக வழங்கப்பட்டு வருகின்றது. இத்திட்டத்தின் கீழ் சம்மாந்துறை களஞ்சியசாலையிலிருந்து சம்மாந்துறை, மல்வத்தை, காரைதீவூ, சாய்ந்தமருது, கல்முனை ஆகிய பிரதேசங்களுக்கு அவ்வப் பிரதேச விவசாயப் பிரதிநிதிகளுடாக மாணிய உரங்கள் வழங்கப்பட்டு வருவதாக பெரும்பாக உத்தியோகத்தர் வை.எம்.ஏ.கபூர் இன்று வெள்ளிக்கிழமை எமக்குத் தெரிவித்தார்.
உரமானியங்கள் தாமதமாக வழங்கப்பட்டுவதாக விவசாயிகள் தெரிவிக்கும் குறைபாடுகள் தொடர்பாக பெரும்பாக உத்தியோகத்தர் கபூர் அவர்களிடம் கேட்டபோது;
எமது சம்மாந்துறை களஞ்சிய பிரிவுக்குட்பட்ட விவசாய காணிகளுக்கு தேவையான உரங்கள் அனைத்தையும் முழுமையாக பெற்று களஞ்சியப்படுத்தக் கூடிய களஞ்சிய வசதியில்லாமையினால் எங்களிடமுள்ள ஒரே ஒரு களஞ்சியத்தின் கொள்ளளவுக்கு ஏற்ப களஞ்சியப்படுத்தப்பட்டு வழங்கப்படுவதனால் சகலருக்கும் ஒரே தடவையில் வழங்க முடியாதுள்ளதாகவும் தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், சம்மாந்துறை களஞ்சியசாலை பிரிவிலுள்ள விவசாயிகளுக்கு 2367. 27 மெற்றிக்தொன் யூரியா உரமும், 780. 33 மெற்றிக்தொன் ரீ.எஸ்.பி. உரமும், 668. 27 மெற்றிக்தொன் எம்.ஓ.பி. உரமும் வழங்கப்படவுள்ளதாகவும் பெரும்போக உத்தியோகத்தர் தெரிவித்தார். இந்நிகழ்வில் களஞ்சிய முகாமையாளர் எம்.திமிர உட்பட விவசாய பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டனர்.