Published On: Wednesday, January 25, 2012
நிர்வாணமாக நடிக்கிறார் பேராண்மை புகழ் சரண்யா

மழைக்காலம் என்றொரு படம் தயாராகிக் கொண்டிருக்கிறது. தீபன் என்பவர் இயக்கிக் கொண்டிருக்கிறார். இப்படத்தில் நடிக்க அழைத்தபோது ஒரு நடிகையும் முன் வரவில்லையாம்.
ஏனென்று விசாரித்தால்தான் பொறி பறக்கிறது. ஓவியக் கல்லூரியில் நடக்கிறது கதை. சரி, அதனாலென்ன? பிரச்சனையே அதுதானாம். ஓவியக் கல்லூரியில் நிர்வாணமாக போஸ் கொடுப்பதற்கென்றே சில பெண்கள் இருப்பார்கள் அல்லவா? அந்த கேரக்டரில் நடிக்கதான் இந்த நடிகைகளுக்கு அழைப்பு விடுத்தார்களாம்.
கிராபிக்ஸ், டூப் என்று எவ்வளவோ ஒப்பேத்தல்கள் இருக்கும்போது இதில் நடிக்க அப்படியென்ன தயக்கம்? டூப்போ, டுபாக்கூரோ, யார் இந்த கேரக்டரில் நடிக்கிறார்களோ அவர்களைதானே நீலக் கண்ணோடு நோக்கும் இந்த சமூகம்.
அதனால் ஆளைவிடுங்க சாமி என்று ஓடியவர்கள்தான் அதிகம். அப்படியிருந்தும் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு களத்தில் குதித்திருக்கிறார் சரண்யா. காதல், பேராண்மை என்று சொற்ப படங்களில் நடித்திருந்தாலும், இவரது துணிச்சலான எஸ்சுக்கே சம்பளத்தை அதிகமாக கொடுத்தாராம் இயக்குனர்.
இப்படி நிர்வாணமாக போஸ் கொடுத்தால் ஒரே நாளிலேயே உலக புகழ் அடையலாம் என்பதற்கு பெங்களூரிலே பூஜா காந்தி என்றொரு நடிகை முன்னுதாரணமாக இருக்கிறார். தமிழ்நாட்டில் சரண்யா போலிருக்கிறது.