எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய 'துருவம்' செய்திகளை உடனுக்குடன் உங்களது கையடக்கத் தொலைபேசியில் இலவசமாக பெற்றுக்கொள்ள "Follow thuruvam" என டைப் செய்து 40404 க்கு அனுப்புங்கள்.
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Wednesday, January 11, 2012

‘ரிதி ரெயக்’ நிகழ்ச்சிக்கு SLT, மொபிடெல் அனுசரணை

Print Friendly and PDF


வருடாந்தம் நடைபெறும் பிரபலமான மாபெரும் கலை நிகழ்ச்சியான ‘ரிதி ரெயக்’ நிகழ்ச்சிக்கு தேசிய தொலைத் தொடர்பு சேவைகள் வழங்குனர்களான ஸ்ரீலங்கா ரெலிகொம் மற்றும் மொபிடெல் இவ்வருடம் பெருமையுடன் அனுசரணை வழங்குகின்றது. வெற்றிகரமாக ஒன்பதாவது வருடமாக நடைபெறவுள்ள ‘ரிதி ரெயக்’ கலை நிகழ்ச்சியில் பிரபல திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நாடக நட்சத்திரங்கள், பிரபலமான திரையிசைப் பாடல்களையும், பிரபலமான திரைப்படங்களின் காட்சிகளையும் மேடையில் அரங்கேற்றவுள்ளனர்.


அண்மையில் புதிதாக திறக்கப்பட்ட உலக தரத்திலான தாமரைக் குளம் மகிந்த ராஜபக்ஷ திரைக்கூடத்தில் ஜனவரி மாதம் 14ஆம் திகதி பி.ப. 7 மணிக்கு நடைபெறவுள்ள இவ்வருட கலை நிகழ்ச்சி மாபெரும் பிரமாண்டமான நிகழ்ச்சியாக கருதப்படுகின்றது. மக்களை தேசிய அளவில் ஒன்றிணைக்கும் தமது அர்ப்பணிப்பின் இலக்கை அடைவதற்காக இந்த நிகழ்ச்சிக்கு அனுசரணை வழங்குவதற்கு ஸ்ரீலங்கா ரெலிகொம் முன்வந்துள்ளது. அதேவேளை, இந்த நிகழ்ச்சிக்கு அனுசரணை வழங்குவதன் ஊடாக, இலங்கையின் திரைப்படத் துறையையும், கலை, கலாசார துறையையும் வலுவூட்டுவதற்கான அர்ப்பணிப்பினையும் ஸ்ரீலங்கா ரெலிகொம் மற்றும் மொபிடெல் என்பன வெளிப்படுத்துகின்றது. 
சுமார் இரண்டரை மணித்தியாலங்கள் நடைபெறவுள்ள இவ்வருடத்தின், ‘ரிதி ரெயக்’ மாபெரும் நிகழ்ச்சியில் மாலினி பொன்சேக்கா, ரவீந்திர ரன்தெனிய, ஜீவன் குமாரதுங்க, ரொபின் பெர்னாண்டோ, ரெக்ஸ் கொடிப்பிலி, கிலிட்டஸ் மென்டிஸ், சிரியானி அமரசேன, வீணா ஜெயக்கொடி, சபீதா பெரேரா, சங்கீதா வீரரட்ன, திஹானி ஏக்கநாயக்க, ரஞ்சன் ராமநாயக்க, மகேந்திர பெரேரா, காஞ்சனா மென்டிஸ், சுராஜ் மாப்பா, குசும் ரேணு, சத்துரிக்கா பீரிஸ், அனர்க்கலி ஆகர்ஷ், சச்சினி அயேந்திரா, மஞ்சுளா குமாரி, அனுஷா தமயந்தி, நிலந்தி டயஸ், உபேக்ஷா சுவர்ணமாலி, பிரபோத சந்தீபனி, சன்ன பெரேரா, ரொஷான் பிலபிட்டிய, புபுது சத்துரங்க, சரங்க திஸாசேகர மற்றும் ரொஷான் ரணவன ஆகிய பிரபலமான நட்சத்திரங்கள் கலந்துகொண்டு பார்வையாளர்களுக்கு பரவசம் அளிக்கவுள்ளனர்.


இவற்றுக்கு மேலதிகமாக, சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட பிரபல மாஸ்ரோ கலைஞரான சன்ன விஜேவர்த்தன நடன வடிவமைப்புச் செய்கின்றமையும் இந்த நிகழ்ச்சியை பிரபல பாடலாசிரியர் நிலார் என்.காசிம் ஒழுங்கமைப்பு செய்கின்றமையும் இந்த நிகழ்ச்சியின் மேலும் சிறப்பம்சமாகும்.

இலங்கையின் அனைத்து பிரபல கலைஞர்களும் ஒன்றிணைந்து பார்வையாளர்களுக்கு மகிழ்ச்சியையும், கொண்டாட்டத்தையும் வழங்கும் தனித்துவமான பிரசித்திபெற்ற நிகழ்ச்சியாக ‘ரிதி ரெயக்’ காணப்படுகின்றது. 310 உறுப்பினர்களைக் கொண்ட திரைக்கலைஞர்களின் “சினே ஸ்டார்” அமைப்பின் நிதியத்திற்கு, உறுப்பினர்களின் நலன்புரி மற்றும் மருத்துவ காப்புறுதிக்கு நிதி சேகரிக்கும் வகையிலேயே இந்த நிகழ்ச்சி முதன் முதலில் ஆரம்பிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியின் போது இரண்டு மாபெரும் கலைஞர்களுக்கு நிதிக் கொடைகளும் வழங்கி சிறப்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related News
1 | 2 | 3 | 4 | 5 | 6 | Next »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »

இணையத்தளங்கள்

Sign Up to Thuruvam Newsletter

© 2012 Thuruvam All Rights Reserved.
|
Call us on ( +94 ) 71 35 45 452