Published On: Wednesday, January 11, 2012
மருத்துவத்துறையில் அம்புலன்ஸ் வண்டி உருவான வரலாறு

இன்று நாம்பார்க்கும் இடமெல்லாம் வைத்தியசாகைள் காணப்படுகின்றன. அவசர அவசரமாக நோயாளிக்கு உரிய வைத்தியசாலையில் மருந்தோ, வைத்தியரோ, சிகிச்சைக்கான உயர்தரத்திலான நிலையமோ இல்லாமல் இருந்தால் உடனடியாகவே பெரியதொரு வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல இந்த வேகமாக செல்லும் வாகனமாக அமைந்ததுதான் அம்புலன்ஸ் வண்டியாகும். ஆனால் இவ்வாறான வண்டி தற்காலத்தில் முதலுதவி சிகிச்சை, மருந்துவகைகள், வைத்தியர்கள், தாதிகள் என ஒரு மினி மொபைல் வைத்தியசாலையாகவே வலம் வருகின்றதை காணலாம்.
இவ்வாறான அம்புலன்ஸ் உருவான வரலாற்றைப் புறட்டிப்பார்த்தால் பதினேழாம் நூற்றாண்டில் ஆரம்பித்ததாக கூறப்படுகின்றது. அந்த காலகட்டத்தில் யுத்தத்தின் போது காயப்பட்ட போர்வீரர்களை சிகிச்சை நிலையங்களுக்கு எடுத்துச் செல்வதற்காக இரண்டு மூங்கில் கம்புகளில் இணைக்கப்பட்ட துணியை தற்காலத்து ஸ்ரெச்சராக அப்போது பயன்படுத்தினர். இதுவே அம்புலன்ஸ் வண்டியின் உருவாக்கமாக கொள்ளப்படுகிறது.
பின்னர் குதிரை வண்டி, மோட்டார் வண்டி எனப் பரிணாமம் பெற்று கி.பி. 18ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில்தான பொது மக்களின் பயன்பாட்டிற்கு அம்புலன்ஸ் வாகனமாக பரிணமித்தது. இந்தியாவின் சுதந்திர புரிஷரான அன்னல் மகாத்மா காந்திகூட தென்னாபிரிக்காவில் இந்தியன் அம்புலன்ஸ் கிராப்ஸ் என்கிற அமைப்பை நிறுவி அங்கு நோயாளிகளை வைத்து ஸ்ரெச்சரை தூக்கும் ஊழியராகவும் இருந்தார். இந்தியாவில் முதன் முறையாக 1914 இல்தான் அம்புலன்ஸ் வண்டி அறிமுகப்படுத்தப்பட்டது. இலங்கையிலும் அதன்பின்னர்தான் அறிமுகப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
அரச வைத்தியசாலைகளுக்கு மாத்திரம் வரையறுக்கப்பட்டிருந்த அம்புலன்ஸ் சேவையானது இன்று தனியார் துறையினரிடமும் காணப்படுவது சிறப்பானதாகும். பல்வேறு நாடுகளில் தனியார் அமைப்புக்களாலும் அம்புலன்ஸ் சேவை நடாத்தப்படுகிறது. இந்தியாவில் இலவச அம்புலன்ஸ்சேவை திட்டம் கடந்த 2005ஆம் ஆண்டில்தான் 108 என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். இன்று நிலத்திலும், நீரிலும், ஏன் ஆகாயத்திலும் அம்புலன்ஸ் சேவை நடாத்தப்படுகிறது. தனியான நடமாடும் அம்புலன்ஸ் கப்பல்களும் உலகில் உண்டு. மக்களின் உயிரை எந்நிலையிலும் காக்க இந்த அம்புலன்ஸ் வண்டிகளின் வரவு நோயாளிகளின் வாழ்வுடன் பின்னிப் பினைந்துள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
- தொகுப்பு: எஸ்.எல்.மன்சூர்