எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய 'துருவம்' செய்திகளை உடனுக்குடன் உங்களது கையடக்கத் தொலைபேசியில் இலவசமாக பெற்றுக்கொள்ள "Follow thuruvam" என டைப் செய்து 40404 க்கு அனுப்புங்கள்.
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Saturday, January 07, 2012

வானத்திலிருந்து செலான் வங்கியின் கூப்பன்கள்

Print Friendly and PDF


இலங்கையின் வங்கியியல் மற்றும் நிதியியல் சேவைகள் துறைகளில் இதுவரைக்கும் கண்டிராத புதுமையான முயற்சியாக 01 மில்லியன் ரூபாவை வானில் இருந்து நேரடியாக 'கீழே போடும்' முன்னெடுப்பையும், ஏக காலத்தில் வீட்டுக்கு வீடு பிரசாரத்தையும் முன்னெடுத்ததன் மூலம் செலான் வங்கியானது சேமிப்புகள் தொடர்பான எண்ணக்கருவை துணிச்சலுடன் மீள்வரைபு செய்துள்ளது. 


ஒக்டோபர் 22 ஆம் திகதி சனிக்கிழமை காலை இலங்கையின் வேறுபட்ட பிரதேசங்களிற்கு மேலாக வான் பரப்பில் உலங்கு வானூர்திகள் (ஹெலிக்கொப்டர்கள்) சுற்றித் திரிந்ததுடன், ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த மக்களை நோக்கி விஷேட தொடரிலக்கங்கள் மற்றும் பிரத்தியேக குறியீட்டு அடையாளங்களைக் கொண்ட பல்லாயிரக் கணக்கான கூப்பன்கள் வானில் இருந்து கீழே போடப்பட்டன. ஏக காலப்பகுதியில் அதாவது அதே தினத்தில் இலங்கை முழுவதிலும் உள்ள செலான் வங்கியின் 131 கிளைகளையும் சேர்ந்த 3000 இற்கும் அதிகமான பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று பிரசாரப் பணிகளை மேற்கொண்டதுடன் இதே வகையான கூப்பன்களையும் விநியோகித்தனர். 

இந்த முன்மாதிரி முயற்சியானது இலங்கையின் பொதுமக்களிடமிருந்து மிகுந்த வரவேற்பைப் பெற்றுக் கொண்டது. அத்துடன் அதற்கு அடுத்த நாள் ஐ.ரி.என். தொலைக்காட்சியில் இடம்பெற்ற சீட்டிழுப்பில் தெரிவு செய்யப்பட்ட வெற்றிக்குரிய பத்து இலக்கங்களுடன் பொருந்திப் போகும் கூப்பன்களை தம்வசம் வைத்திருந்த ஐந்து பேர் அதிர்ஷ்டசாலி வெற்றியாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். 

இந்த ஊக்குவிப்புத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட தினத்தன்று திருமதி. ஏ.ஜே. மேரி சீத்தா, முன்பள்ளி பயிற்சி அமர்வில் பங்கேற்பதற்காக றம்பாவௌ கிராமத்திலுள்ள தனது வீட்டிலிருந்து புத்தளம் நகரத்திலுள்ள அன்ட்ரூ பாடசாலைக்கு வழமைபோல வந்தார். றம்பாவௌவில் இருந்து பிரதான வீதிக்கு வருவதென்றால் அரை மணித்தியால நேரம் நீண்டதூரம் அவர் (கால்நடையாக அல்லது துவிச்சக்கர வண்டியில்) பயணிக்க வேண்டும். பின்னர் அங்கிருந்து நகர்ப்பகுதி வரை 30 நிமிட நேரம் பஸ்ஸில் அவர் பயணம் செய்ய வேண்டும்.

'அமர்வின் இடைவேளை நேரத்தில் நாம் பூங்காவுக்கு வந்தோம். அப்போது ஹெலிகொப்டரின் சத்தத்தை நான் கேட்டேன். அத்துடன் கூப்பன்கள் வண்ணாத்துப் பூச்சிகளைப் போல கீழ் நோக்கி பறந்து வந்து கொண்டிருப்பதையும் கண்டேன். சில கூப்பன்கள் பூங்காவுக்குள் விழுந்தன அதில் ஒன்றினை நான் எடுத்தேன். எனது மகன் சுரஞ்சன் (14 வயது) சந்தோசமும் ஆச்சரியமும் அடைந்தான். இது தொடர்பில் மிகுந்த எதிர்பார்ப்புக்களை அவன் கொண்டிருந்தான். எங்கள் வீட்டில் தொலைக்காட்சிப் பெட்டி இல்லை என்பதால், மறுநாள் இரவு சீட்டிழுப்பை பார்ப்பதற்காக மகனும் நானும் பக்கத்து வீட்டிற்குச் சென்றோம். நாம் வெற்றி பெற்றோம். நம்பமுடியாத ஒன்றாகவும் ஒரு கனவு நனவானது போலவும் அது இருந்தது” என்று இவர் கூறினார். 

மேரி சீத்தாவின் கணவர் அபேசிங்க ஒரு விவசாயி ஆவார். இவருக்கு மஹேஸ் (19 வயது) மற்றும் ஹசான் (17 வயது) ஆகிய இரு மகன்களும் ஹசினி (வயது 07) என்ற மகளும் உள்ளனர். தனது திட்டங்கள் தொடர்பாக அவர் விபரிக்கையில், முதலாவதாக செலான் வங்கியில் நான் கணக்கு ஒன்றினை திறந்தேன். சில கடன்களை திருப்பிச் செலுத்துவதற்காக பொருட்டு ஒரு தொகைப் பணத்தை பயன்படுத்தினேன்;. மகன் சுரஞ்சன் சங்கீதத்தில் திறமையுள்ளவராகவும் அது தொடர்பில் மிகுந்த எதிர்பார்ப்புக்களையும் கொண்டிருப்பதால் அவருக்காக 'ஓர்கன்' இசைக் கருவி ஒன்றினை கொள்வனவு செய்வதற்கு நான் திட்டமிட்டிருந்தேன். எனது ஏனைய பிள்ளைகளுக்கான பரிசுப் பொருட்கள், கணவரின் மற்றும் எனது பெறN;றார்களுக்கு ஒரு தொகைப் பணம் ஆகியவற்றுக்கான செலவு தவிர மிகுதித் தொகையை நிலையான வைப்பில் வைப்புச் செய்வேன். இன்று ஒரு இலட்சம் ரூபா பணச் செல்வத்தை பெற்றமைக்காக நானும் எனது குடும்பமும் செலான் வங்கிக்கு நன்றி தெரிவிக்கின்றோம்” என்று அவர் நன்றியுணர்வுடன் கூறினார்.

பெல்மதுளை நகர் பலாங்கொடை வீதியில் தனக்குச் சொந்தமான மோட்டார் சைக்கிள் திருத்தும் நிலையம் ஒன்றினை நடத்திவரும் திரு. எம்.பி.எம்.எம். ஹஸீம், தனது காலடிக்கு திரு. சமன் என்பவரால் கொண்டுவரப்பட்ட வெற்றிக்குரிய கூப்பனை தம்வசம் கொண்டிருந்தார். ஹஸீமின் வழக்கமான வாடிக்கையாளர் என்பதற்கு அப்பால் சமன், செலான் வங்கியின் பெல்மதுளை கிளையில் பணியாற்றி வருகின்றார். வீட்டுக்கு வீடு பிரசார நடவடிக்கையின் ஒரு அங்கமாக அவர் தனது நண்பருக்கு மூன்று கூப்பன்களை வழங்கி இருந்தார். 

“இதுபோல வெற்றி ஒன்றினை இதற்கு முன்னர் நான் பெற்றதில்லை. எனவே இதுபோன்ற விடயங்களில் மிகுந்த ஈடுபாடு இருந்ததும் இல்லை. நாம் வழக்கமாகவே நேரகாலத்துடன் உறங்குவதற்கு போய் விடுவோம். அதனால் எனது குடும்பத்தினர் குறித்த சீட்டிழுப்பை பார்க்கும் வாய்ப்பினை தவற விட்டு விட்டனர். நான் ஞாயிற்றுக்கிழமை பின்னிரவு வரை வேலை செய்து கொண்டிருந்தமையால் நானும் சீட்டிழுப்பு நிகழ்ச்சியை பார்க்க தவறிவிட்டேன். திங்கட் கிழமை காலையில் சமன் மீண்டும் வந்தார். இந்த முறை, வெற்றி பெற்ற இலக்கங்களின் பட்டியலினை அவர் கொண்டு வந்திருந்தார். நான் வெற்றி பெற்றிருப்பதை அறிந்ததும் நாம் இருவரும் அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்தோம்' என்று அவர் கூறினார்.

செலான் வங்கியின் பொது முகாமையாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான கபில ஆரியரத்ன கூறுகையில், தொடர்ச்சியாக புதிய மற்றும் புத்தாக்க திட்டங்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் எமது வாடிக்கையாளர்களுக்கு உயர் பெறுமதிகளை வழங்குவதாக செலான் வங்கி ஏற்கனவே வழங்கியுள்ள வாக்குறுதிக்கு, இந்த முன்னெடுப்பானது இன்னுமொரு உதாரணமாக அமைகின்றது என்றார். உண்மையிலேயே, உள்நாட்டு நிதியியல் துறையில் மிகவும் வரவேற்பைப் பெற்றதும் அதேநேரம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியதுமான புரட்சிகரமான எமது ‘பரிசுக்கு மேல் பரிசு வெகுமதி வழங்கல் திட்டத்தின் ஒரு முன்னோடி முயற்சியாகவே இது அமைந்திருந்தது.

மேலும் மன மகிழ்ச்சி தரவல்ல உற்பத்திகளுடன், நாடெங்கிலும் உள்ள எமது ஆயிரக்கணக்கான தற்போதைய மற்றும் எதிர்கால வாடிக்கையாளர்களுக்கு சேவையாற்றுவதற்கு நாம் முழுமையான அர்ப்பணிப்புடன் இருக்கின்றோம். அதுமாத்திரமன்றி ‘அன்புடன் அரவணைக்கும் வங்கி' என்ற வகையில், மிகவும் வேகமாக வளர்ச்சியடைந்து செல்லும் செலான் குடும்பத்தில் ஒரு அங்கத்தவராக இணைந்து கொள்ளுமாறு நாட்டின் அனைத்துப் பிரஜைகளையும் வரவேற்பதற்கும் நாம் எதிர்பார்த்துள்ளோம்' என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஐந்து பிள்ளைகளின் தந்தையான ஹஸீம், அனைத்துத் தொகைப் பணத்தையும் செலான் வங்கியில் வைப்புச் செய்வதற்கும், வீட்டினை புதுப்பிப்பதற்காக கடன் ஒன்றினைப் பெற்றுக் கொள்ளவும் நான் திட்டமிட்டுள்ளேன் என்று தெரிவித்தாh. 'இப்போது நான் செலான் வங்கி பெல்மதுளை கிளையின் நம்பிக்கைக்குரிய வாடிக்கையாளராகி விட்டேன். அத்துடன் மிகச் சிறந்த சேவைகளை வழங்குகின்றமைக்காக வங்கியின் சுறுசுறுப்புமிக்க, இளம் மற்றும் ஊக்கமுள்ள ஊழியர்களுக்கு நான் நன்றி கூற விரும்புகிறேன்' என்று அவர் மேலும் குறிப்பிட்டார். 

Related News
1 | 2 | 3 | 4 | 5 | 6 | Next »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »

இணையத்தளங்கள்

Sign Up to Thuruvam Newsletter

© 2012 Thuruvam All Rights Reserved.
|
Call us on ( +94 ) 71 35 45 452