நியூஸிலாந்து தலைநகர் வெலிங்டன் அருகே உள்ள கார்டர்டான் பகுதியில், வெப்பக் காற்று பலூன் வெடித்த விபத்தில் 11 பேர் பலியானர். பலூன், பயணத்தை தொடங்கிய அடுத்த 10ஆவது நிமிடத்தில் அதிலிருந்து 10 மீற்றர் உயரத்திற்கு தீச்சுவாலைகள் எழுந்தது. இதனையடுத்து, ராக்கெட் வேகத்தில், அந்த பலூன் கீழே விழுந்ததாக இச்சம்பவத்தை நேரில் பார்த்தவர் கூறினார். பலூன், மின்சாரக் கம்பியில் மோதியதாலேயே இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.