Published On: Monday, January 23, 2012
'பெரிய புராணம் காட்டும் வாழ்வியல்' கருத்தரங்கும் கருத்தாடலும்

(அஹமத் அஸ்ஜத் இர்ஷாத்)
பெரிய புராணம் காட்டும் வாழ்வியல் என்ற தலைப்பில் கருத்தரங்கும் கருத்தாடலும் நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை மாலை நல்லூர் நாவலர் கலாசார மண்டபத்தில் யாழ். பல்கலைக்கழக இந்து நாகரிகத்துறைத் தலைவர் பேராசிரியர் மா. வேதநாதன் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் திருநாவுக்கரசு நாயனார் புராணம் பற்றிய கருத்துரைகளும் கருத்தாடல்களும் இடம்பெற்றன. நிகழ்வில் தொடக்கவுரையை கலாநிதி மனோன்மணி சண்முகதாஸும் நிறைவுரையைப் பேராசிரியர் அ.சண்முகதாஸும் வழங்கினர்.
கருத்துரைகளை யாழ். பல்கலைக்கழக இந்து நாகரிகத்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் சுகந்தினி ஸ்ரீமுரளிதரன், மானிப்பாய் மகளிர் கல்லூரித் தமிழாசிரியர் ந.சத்தியவேந்தன் ஆகியோர் நல்கினர். கருத்தாடல் இணைப்பாளர்களாக கோப்பாய் ஆசிரிய கலாசாலை விரிவுரையாளர் ச.லலீசன், சரவணை நாகேஸ்வரி வித்தியாலய ஆசிரியர் கு.பாலசண்முகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.








