Published On: Sunday, January 29, 2012
அகில இன நல்லுறவு ஒன்றியத்தின் சாமஸ்ரீ பட்டமளிப்பு விழா

(கலாநெஞ்சன்)
அகில இன நல்லுறவு ஒன்றியம் தொடர்ச்சியாக 18ஆவது வருடமாக நடத்திவரும் சாமஸ்ரீ தேசிய பாராட்டு விழா நேற்று சனிக்கிழமை இரத்தினபுரி சத்தார் மண்டபத்தில் அதன் தலைவர் சாமஸ்ரீ சரத் மலவர ஆராச்சி தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் சமய,சமூக, கலை கலாசாரம், போன்ற பொது விடயங்களில் ஈடுபாடு கொண்டுள்ளவர்களில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சிலர் சாமஸ்ரீ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
அத்தடன், அகில இன நல்லுறவு ஒன்றியத்தின் தலைவர் சாமஸ்ரீ சரத் மலவர ஆராச்சி, செயலாளர் சாமஸ்ரீ எம்.ஹசைன், தேசிய அமைப்பாளர் யூ.எல்.எம்.ஹனீபா ஆகியோரும் அங்கு உரையாற்றுயதுடன், நிகழ்வில் கலை நிகழச்சிகளும் இடம்பெற்றன.




