Published On: Sunday, January 29, 2012
சாய்ந்தமருதில் நடமாடும் பொலிஸ் சேவை

(எம்.ஐ.எம்.அஸ்ஹர்)
கல்முனை பொலிஸார் சாய்ந்தமருது அல்-ஜலால் வித்தியாலயத்தில் நேற்று சனிக்கிழமை பொதுமக்கள் நடமாடும் சேவையினை ஒழுங்கு செய்திருந்தனர். இந்நிகழ்விற்கு சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் கல்முனை பொலிஸ் நிலைய உதவி பொலிஸ் பரிசோதகர் பீ.டபிள்யு.டி.டி. ஆரியரெட்ன, கல்முனை பௌத்த விகாரையின் விகாராதிபதி ரன்முத்துக்கல தேரர் மற்றும் பாடசாலை அதிபர்.எஸ்.எம்.நபார் ஆகியோர் அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வின்போது சாய்ந்தமருது அல்-ஜலால் வித்தியாலயத்தில் கல்வித்துறையில் திறமை காட்டிய மாணவிகளுக்கு பரிசில்களும் சாய்ந்தமருது பிரதேச வீட்டுத்தோட்ட முயற்சியாளர்களுக்கு மரக்கன்றுகளும் வழங்கப்பட்டன. பொலிஸார் பொதுமக்களுக்கு தேவையான சேவையினை வழங்கியதுடன் பாடசாலை வளாகத்தினுள் மரக்கன்று அதிதிகளினால் நாட்டி வைக்கப்பட்டது.



