Published On: Sunday, January 29, 2012
ஐ.நா. மனித உரிமைகள் குழுவின் 19ஆவது அமர்வில் கூட்டமைப்பு பங்கேற்கும்

(முஹம்மட் பிறவ்ஸ்)
பெப்ரவரி 27 - மார்ச் 23 வரை ஜெனீவாவில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் குழுவின் 19ஆவது அமர்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பங்கேற்கவுள்ளது. இதற்காக கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையிலான குழு பெப்ரவரி நடுப்பகுதியில் ஜெனீவா செல்லவுள்ளது.
அமெரிக்கா உட்பட பல நாடுகளும் ஐ.நா. மனித உரிமைகள் மாநாட்டில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பங்கேற்க வாய்ப்பளிக்க வேண்டுமென கேட்டுக்கொண்டதும் இங்கு குறிப்பிடத்தக்கது. ஐ.நா. மனித உரிமைகள் அமர்வுகளின்போது கூட்டமைப்பின் தலைவர்கள் மற்றும் மூத்த அரசியல் நிபுணர்கள் இதில் கலந்துகொள்வர் என நம்பப்படுகிறது.