Published On: Wednesday, January 25, 2012
வீரர்களுக்கு கால்களால் மசாஜ் செய்யும் பெண்
பிரித்தானியாவின் மிகச் சிறந்த விளையாட்டு வீரர்கள் சிலருக்கு காலால் மசாஜ் செய்து விடுகிறார் சூ கேண்ட் என்ற பெண். 49 வயதான சூ கேண்ட் என்ற பெண்ணே 2012 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் விளையாடவுள்ள அணியினருக்கே மாசாஜ் செய்து விடுகின்றார்.

பிறக்கும் போதே இவரது கைகளின் நீளம் 8 அங்குலம் மட்டுமே. 3 வருடம் மசாஜ் செய்வதற்கு பயிற்சி எடுத்த நான் இவ்வாறு உயர்மட்ட அணியினருக்கு பயிற்சி கொடுப்பது மகிழ்ச்சியளிப்பதாக கூறுகிறார். இவர் ஒரு மசாஜ் நிபுணர் என்பது குறிப்பிடத்தக்கது.


