Published On: Wednesday, January 25, 2012
13 வயது மாணவனால் 43 வயது ஆசிரியை கர்ப்பம்
13 வயது மாணவனுடன் உடலுறவுகொண்ட குற்றச்சாட்டில் 43 வயது ஆசிரியை ஒருவரை பொலிஸார் கைது செய்த சம்பவம் ஆஸ்திரியாவில் இடம்பெற்றுள்ளது. மேற்படி ஆசிரியையும் தானும் காதலிப்பதுடன் திருமணம் செய்துக்கொள்வதற்கு தீர்மானித்தாக மேற்படி சிறுவன் நீதிமன்றத்தில் தெரிவித்தான். இதனால் அந்த ஆசிரியைக்கு ஒத்திவைக்கப்பட்ட தண்டனைகள் மாத்திரமே வழங்கப்பட்டுள்ளன.

ரினோட்டா என்ற ஆசிரியையே இவ்வாறு கைது செய்யப்பட்டவராவார். மேற்படி ஆசிரியை குறித்த மாணவனுடனான விவகாரம் காரணமாக ஆசிரியர் தொழிலையும் இழந்துள்ளார். அதன்பின் அம்மாணவனுடனும் அவனது தாயுடனும் ஒரே வீட்டில் தங்கியிருக்க அவர் தீர்மானித்தார். தற்போது மேற்படி சிறுவனுக்கு 16 வயதாகிறது. இந்நிலையில் அப்பெண் கர்ப்பமாகவுள்ளாராம்.
இச்சம்பவம் குறித்து மேற்படி ஏர்வின் சிறுவன் தெரிவிக்கையில், 'அப்பெண் என்னை மயக்கி உறவை ஏற்படுத்திக் கொண்டதைப் போலவும் நான் பாதிக்கப்பட்டவன் போலவும் சித்தரிக்கப்படுகிறேன். ஆனால் அது முற்றிலும் தவறான விளக்கமாகும். உண்மையில் அனைத்து நகர்வுகளையும் நானே மேற்கொண்டேன்' எனக் கூறியுள்ளான்.
ஏர்வின் பயிற்சிபெற்ற கைப்பந்தாட்ட குழுவின் பயிற்றுநகராக ரெனோட்டா பணியாற்றினார். தற்போது தான் கர்ப்பமானமை குறித்து மிகவும் மகிழ்ச்சியடைவதாக அவர் கூறியுள்ளார். இவர் குரோஷியாவிலிருந்து ஆஸ்திரியாவுக்கு இடம்பெயர்ந்தவராவார்.
இவர்கள் 4 மாதகாலம் பொறுத்திருந்தால் வழக்கை எதிர்கொண்டிருக்க மாட்டார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. ஏனெனில் ஆஸ்திரியாவில் பாலியல் உறவில் ஈடுபடுவதற்கான குறைந்தபட்ச வயது 14 ஆகும். ரெனோட்டாவிற்கு ஏற்கெனவே ஏர்வினை விட ஒரு வயது இளைய ஒரு மகள் இருக்கிறாள். அச்சிறுமியும் ஏர்வின் கல்வி பயிலும் பாடசாலையிலேயே மாணவியாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.
தற்போது ஏர்வின்- ரெனோட்டா ஜோடியானது திருமணம் செய்துக்கொண்டுள்ளதுடன் அவர்களது குழந்தை எதிர்வரும் ஜுன் மாதம் பிறக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.