Published On: Wednesday, January 25, 2012
அப்துல் கலாமை அமைச்சர்கள் நேற்று வழியனுப்பி வைத்தனர்
(இர்ஷாத் றஹ்மத்துல்லா)
இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருந்த இந்திய முன்னாள் குடியரசுத் தலைவரும், விஞ்ஞானியுமான அப்துல் கலாம் நேற்று வியாழக்கிழமை புதுடில்லி நோக்கி புறப்பட்டார்.
இலங்கைக்கு சொந்தமான யு.எல். 151 இலக்கம் கொண்ட விமானத்தில் பிற்பகல் 2.35க்கு பயணமானார். இவரை வழியனுப்பி வைக்கவென சர்வதேச விமான நிலையத்திற்கு அமைச்சர்களான றிசாத் பதியுதீன், திஸ்ஸ விதாரணண, பிரதி அமைச்சர் நியோமல் பெரேரா, பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வர் ஆகியோர் வருகை தந்திருந்தனர்.