Published On: Monday, January 30, 2012
ATM இயந்திரத்தில் எலியை எடுத்த வாடிக்கையாளர்
ATM இயந்திரம் ஒன்றில் பணத்தை எடுக்கும்போது எலியை எடுத்த சம்பவம் சுவீடன் நாட்டின் வடக்குப் பகுதியில் நடந்துள்ளது. தனது கணக்கிலிருந்து ஹபிஸி என்பவர் 104 டொலர் பணத்தை எடுக்கும்போது, பணத்துடன் சேர்ந்து எலியும் வந்துள்ளது.

இதுகுறித்து ஹபிஸி தெரிவிக்கையில், ATM இயந்திரத்தில் ஒன்று தொங்குவது போலத் தெரிந்தது. அதை இழுத்தபோது எலியின் வால் எனத் தெரிந்தது. உடனே அருகிலுள்ள கடை ஒன்றில் இதனைத் தெரிவித்தபோது, அவர் என்னை பொய் என்று அலட்சியப்படுத்திவிட்டார். பின்னர் நான் அதை முழுமையாக வெளியே எடுத்தபோது, இரத்தத்துடன் எலி வெளியே வந்தது.
விரைவில் நமது நாட்டிலும் ATM இயந்திரத்தில் எதுவேண்டுமானாலும் வரலாம். இக்காலத்தில் மனிதனைத்தான் நம்பமுடியவில்லை. ஆனால், இப்போது இயந்திரங்களையும நம்ப முடியாமல் இருக்கிறதே. இதற்கு அந்த வங்கிதான் முழுப்பொறுப்பு. எது எப்படியோ, இந்த சுவாரஸ்யமான செய்தியை துருவம் வாசகர்களுக்காக இங்கு தருகிறோம்.