Published On: Sunday, January 29, 2012
புளிச்சாக்குளத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் - ஊடகவியலாளர்கள் சந்திப்பு
(புத்தளம் செய்தியளர்)
புத்தளம் மாவட்டத்திலுள்ள புளிச்சாக்குளம் பிரதேசத்தில், அப்பிரதேசம் தொடர்பான கலந்துரையாடலொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தினால் புளிச்சாக்குளத்தில் நடாத்தப்பட்ட ஊடக கருத்தரங்கிற்கு வருகைதந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போர உறுப்பினர்களுடனான கலந்துரையாடலை அப்பிரதேச ஊடகவியலாளர்கள் ஏற்பாடு செய்திருந்நதனர்.
பாராளுமன்ற உறுப்பினர் எம்.பீ.பாரூக், வடமேல் மாகாண சபை உறுப்பினர்களான ஏ.எச்.எம். ரியாஸ், எஸ்.ஏ. எஹ்யா ஆராச்சிகட்டு பிரதேசசபை உபதலைவர் தட்சனாமூர்த்தி உறுப்பினர்களான எஸ். நிஜாமுதீன், சீ்.எம்.எம்.சரீப் உட்பட மஸ்ஜித் நிர்வாக சபை உறுப்பினர்கள், உலமாக்கள் ஆகியோரும் இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.