Published On: Sunday, January 22, 2012
கராத்தேயில் வெற்றியீட்டிய புத்தளம் ஸாஹிரா மாணவர்கள் கெளரவிப்பு
(பாத்திமா ரினோஸா)
கயோடாங் கராத்தே போட்டியில் வெற்றிபெற்ற புத்தளம் ஸாஹிரா மாணவர்களை கெளரவிக்கும் நிகழ்வு ஸாஹிரா கல்லூரி அஸ்வர் மண்டபத்தில் இடம்பெற்றது. புத்தளம் நகரசபை தலைவர் கே.ஏ. பாயிஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். புத்தளம் ஸாஹிரா தேசிய கல்லூரி மாணவர்கள் நான்கு தங்கப் பதக்கங்களையும் ஒரு வெள்ளிப் பதக்கங்களையும் கயோடாங் கராத்தே போட்டியில் பெற்றுக்கொண்டனர்.


