Published On: Saturday, January 07, 2012
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் கராத்தே பயிற்சி முகாம்

(யு.கே.காலித்தீன்)
இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உடற்பயிற்சி பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒருநாள் கராத்தே பயிற்சி முகாம் நேற்று வெள்ளிக்கிழமை இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக உள்ளக அரங்கில் இடம்பெற்றது. இப்பயிற்சி முகாமிற்கு பிரதம பயிற்றுவிப்பாளராக ஜப்பான் நாட்டைச்சேர்ந்த சர்வதேச கராத்தே பயிற்றுவிப்பாளரும் கிரேன் மாஸ்டருமான சிகான் சிரோனி ஓட்டா கலந்து கொண்டமை சிறப்பம்சமாகும்.
உடற்பயிற்சிப்பிரிவின் கராத்தே பயிற்றுவிப்பாளர் ஏ.ஆர்.முஹம்மது இக்பால் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக இலங்கை தென்கிழக்குப் பல்கலைக் கழக பதிவாளர் எச். அப்துல் சத்தார் கலந்து கொண்டார்.
இப்பயிற்சி நெறியின்போது இப்பல்கலைக்கழகத்தின் கலை கலாசார பீடாதிபதி கே.எம்.எம். பழில் ஹக், உடற்பயிற்சி பிரிவின் தவிசாளர் டாக்டர் ஏ. ஜஃபர், உடற்பயிற்சி பிரிவின் பொறுப்பதிகாரியும் போதனாசிரியருமான எம்.எல்.ஏ.தாகீர், இலங்கை சொட்டோகன் கராத்தே சம்மேளனத்தின் போதனாசிரியர் டீ.எம்.டீ. நிமால் ஆகியோருடன் பல்கலைக்கழக விரிவுளையாளர்களும் கலந்து கொண்டனர்.


