Published On: Thursday, January 12, 2012
திங்கட்கிழமை தரம் ஒன்று மாணவர்களின் ஏடுதொடங்கும் விழா

(எஸ். எல். மன்சூர்)
நாட்டிலுள்ள அனைத்து அரச பாடசாலைகளிலும் புதிதாக இணைந்து கொண்ட தரம் ஒன்று மாணவர்களின் ஏடு தொடக்க விழா எதிர்வரும் திங்கட்கிழமை நாடுமுழுவதும் நடைபெறவிருக்கின்றன. இதனை முன்னிட்டு அட்டாளைச்சேனைக் கோட்டத்திலுள்ள பாடசாலைகளிலும் மிகவும் கோலாகலமான முறையில் இவ்விழா நடைபெறுவதற்கான ஏற்பாடுகளை பாடசாலையின் அதிபர்கள் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், ஒலுவில் அல்-அஷ்ஹர் வித்தியாலயத்தில் நடைபெறும் ஏடு தொடங்கும் விழாவில் அக்கரைப்பற்று கல்வி வலயத்தின் உதவிக் கல்விப் பணிப்பாளர் பி.எம். அபுல்ஹஸன், கோட்டக்கல்வி அலுவலக அதிகாரி எம்.ஏ.சி. கஸ்ஸாலி, அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் ஏ.எல். அமானுல்லா மற்றும் ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் பெற்றோர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளதாக அதிபர் எம்.எல்.எம். இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.