Published On: Saturday, January 07, 2012
'தேசத்துக்கு மகுடம்' கண்காட்சி நுழைவுச்சீட்டு ஜனாதிபதியிடம் கையளிப்பு

அநுராதபுரம் ஓயாமடு பகுதியில் நடத்தப்படவுள்ள ‘தேசத்துக்கு மகுடம்' கண்காட்சி தொடர்பான மீளாய்வுக் கூட்டம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் நேற்று நடைபெற்றது. ‘தேசத்துக்கு மகுடம்' கண்காட்சிக்கான நுழைவுச்சீட்டு மற்றும் லொத்தர் சீட்டு என்பவை நேற்று ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டன. அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவர் சந்திரவங்ச பதிராஜ இவற்றை ஜனாதிபதியிடம் கையளித்தார்.
‘தேசத்துக்கு மகுடம்' நடைபெறுவதை முன்னிட்டு இப்பகுதி மக்களுக்கு தேவை யான சகல வசதிகளையும் அடிப்படைத் தேவைகளையும் பூர்த்தி செய்து வழங்கு மாறும், பின்தங்கிய பகுதிகளை இனங்கண்டு அப்பகுதிகளிலுள்ள வணக்கஸ்தலங்களைப் புனரமைக்குமாறும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.
‘தேசத்துக்கு மகுடம்' கண்காட்சி பூமியில் நிர்மாணிக்கப்பட்டுவரும் நிரந்தர கட்டடங்களின் நிர்மாணப்பணிகள் தொடர்பாகவும், பெருந்தெருக்கள், நீர்பாசனம், குடிநீர்விநியோகம், வீடமைப்பு, மின்சாரம், தொலைத்தொடர்பு என்பவை தொடர்பாகவும், இதுவரை செய்யப்பட்டிருக்கும் வேலைகள் தொடர்பாகவும் ஜனாதிபதி அதிகாரிகளிடம் கேட்டறிந்துகொண்டார். கண்காட்சியை முன்னிட்டு கட்டப்படும் நிரந்தர கட்டடங்கள் பின்னர் அரச அலுவலகங்களாக பயன்படுத்தப்படும் எனவும் இக்கலந்துரையாடலின்போது தீர்மானிக்கப்பட்டது.
இதில் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, தொலைத்தொடர்புகள் அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய, ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் டபிள்யூ.பி. கனேகல உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.