Published On: Sunday, January 29, 2012
கலாபூஷண விருது பெற்றவர்களை கௌரவிக்கும் நிகழ்வு
(புத்தளம் செய்தியாளர்)
புத்தளம் மாவட்டத்திலுள்ள உடப்பு கிராமத்தில் கலாபூஷண விருது பெற்றவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு உடப்பு இந்து நெறிக் கழக வளாகத்தில் இடம்பெற்றது. இந்த கௌரவிப்பு விழாவில் கலாபூஷணம் கிட்ணன் ஸ்ரீஸ்கந்தராஸா, எம். சாம்பசிவம் இருவரும் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர். இந்த நிகழ்வில் வடமேல் மாகாண சபை உறுப்பினர்களான ஏ.எச்.எம். ரியாஸ், எஸ்.ஏ. எஹ்யா உட்பட பலரும் அதிதிகளாக கலந்துகொண்டனர்.