Published On: Sunday, January 29, 2012
ஆசனங்களின் எண்ணிக்கைக்கு ஏற்பவே பயணிகளை ஏற்ற வேண்டும்

(பஹமுன அஸாம்)
பயணிகள் வாகனங்களில் ஆசனங்களின் எண்ணிக்கையை விட அதிகமாக பயணிகளை ஏற்றிச் செல்லும் வாகனங்களை பொலிஸார் கடுமையாக கண்காணிக்கவுள்ளதுடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முச்சக்கர வண்டியின் ஆசனத்தின் கொள்ளவுக்கு அதிகமான பயணிகளை ஏற்றிச் செல்ல வேண்டாம் என்று முச்சக்கர வண்டி சாரதிகளை பொஸிஸார் எச்ரித்துள்ளனர். கல்கிஸ்சையில் இடம்பெற்ற விபத்தையடுத்தே இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
12 வயதுக்குட்பட்ட பிள்ளைகளை வாகனம் ஏற்றிச் செல்லுமெனில் எமக்கு பிரச்சினையில்லை. எனினும் ஆசனங்களின் கொள்ளளவும் வாகனத்தினால் ஏற்றிச் செல்லக் கூடிய பயணிகளின் எண்ணிக்கையும் வாகன பதிவு அனுமதிப்பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த சட்டங்கள் பொலிஸ் கட்டளைச் சட்டத்தில் இருக்கின்றன. எனினும் குறிப்பாக இந்த வயதெல்லைக்குட்பட்ட பாடசாலை மாணவர்கள் காரணமாக பொலிஸார் இதில் கண்டிப்பாக இருந்திருக்கவில்லை என்றும் அஜித் ரோஹண குறிப்பிட்டுள்ளார். பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் வான்களை ஒழுங்குப்படுத்த அதிகாரமளிக்கும் வகையில் பொலிஸார் சில யோசனைகளை முன்வைத்துள்ளனர்.
பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் பாடசாலை வாகன சாரதிகளின் தகுதி தொடர்பான தரங்களை ஏற்படுத்த வேண்டியது அவசியம் என்றும் அவர் கூறியுள்ளார்.