Published On: Tuesday, January 31, 2012
அரசினால் பொருளாதாரத்தை நிலைநிறுத்த முடியவில்லை - ரணில்

அரசாங்கம் பொருளாதார ஸ்திரத்தன்மையை பராமரிக்க முடியாமல் தோல்வியடைந்ததுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நேற்று கொடகம பிரதேசத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய, எதிர்க்கட்சி தலைவர், சர்வதேச நாணய நிதியத்தினால் அதிகளவு வட்டி அறவீடு செய்யப்படுவதாக மத்திய வங்கி ஆளுனர் குற்றம் சுமத்தியுள்ளார். சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கடன் பெற்றுக் கொண்டால் இரண்டு வீத வட்டியை செலுத்த வேண்டுமென ஆளுனர் தெரிவித்துள்ளார்
இவ்வாறு கடன் பெற்றுக் கொள்வதனால் நாடு பாரியளவிலான பொருளாதார நெருக்கடிகளை எதிர்நோக்கக் கூடும் என ரணில் விக்ரமசிங்க எச்சரித்துள்ளார்.