Published On: Wednesday, January 25, 2012
வன்னியிலும் கடும் குளிரான காலநிலை நிலவுகிறது

வன்னியில் கடும் குளிரான காலநிலை நிலவி வருகிறது. பகல் வேளையில் வன்னி முழுவதிலும் கடுமையான வெப்பம் நிலவி வருவதாகவும் காலை, மாலை வேளையில் கடுமையான குளிருடன் கூடிய காலநிலை நிலவி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இக்காலநிலை மாற்றத்தினால் அங்குள்ள மக்கள் பல்வேறு நோய்களினால் பாதிக்கப்பட்டுள்ளனர். தோல் நோய், தொண்டை, சுவாசப் பிரச்சினை மற்றும் காய்ச்சல் போன்ற நோய்களினால் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.