Published On: Thursday, January 12, 2012
தனியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்

றுஹுணு பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் நேற்று தனியார் பல்கலைக்கழகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டிருந்தனர். காலி கனேகல்ல பிரதேசத்திலுள்ள பொறியியல் மற்றும் மருத்துவ பீட மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தின் போது ஒரு சில மணித்தியாலங்களுக்கு வீதி போக்குவரத்தை தடை செய்திருந்தனர். பொலிஸார் போக்குவரத்திற்கு இடம்விடக் கோரியும் மாணவர்கள் பிரதான வீதியில் போக்குவரத்திற்கு இடைஞ்சலாக இருந்தமையினால் மாணவர்களை அங்கிருந்து கலையும் முகமாக பொலிஸார் கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொள்ள வேண்டி நேரிட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
இருப்பினும், அதற்குப் பின்னரும் மாணவர்கள் வீதியோரங்களிலிரு ந்து அமைதியான முறையில் ஆர்ப் பாட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இதேவேளை, வெல்லமடம பிரதேசத் திலுள்ள ஏனைய பீடங்களைச் சேர்ந்த மாணவர்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட் டதுடன் ஊர்வலமாக செல்ல முயற்சித்த போதும் கலகமடக்கும் பொலிஸார் சம்பவ இடத்தில் வீதித்தடைகளை ஏற்படுத்தியிருந்தயைடுத்து மிகவும் அமைதியான முறையிலேயே ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டிருந்தது.