Published On: Thursday, January 26, 2012
தேசத்திற்கு மகுடம், சுதந்திரதின வைபவம்; 50 பாடசாலைகளுக்கு விடுமுறை

இலங்கையின் 64ஆவது சுதந்திரதினம் மற்றும் தேசத்திற்கு மகுடம் (தயட்ட கிருள) கண்காட்சி என்பவற்றை முன்னிட்டு அநுராதபுரம் கல்வி வலயத்திலுள்ள 50 பாடசாலைகளுக்கு இம்மாதம் 27ஆம் திகதியிலிருந்து பெப்ரவரி 12ஆம் திகதி வரை விடுமுறை வழங்க வடமத்திய மாகாண கல்வி திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதாக கல்வி பணிப்பாளர் ரமணி ஏக்கநாயக்க தெரிவித்தார்.
பாடசாலைகள் மூடுவது தொடர்பாக சம்பந்தப்பட்ட பாடசாலைகளுக்கு சுற்றுநிருபம் அனுப்பப்பட்டுள்ளது. வைபவங்களுக்கு வருகை தரும் பாதுகாப்பு படையினர் தங்குவதற்கான இடமாக பாடசாலைகள் இயங்கவுள்ளதினால் நகரிலுள்ள பாடசாலைகள் 06ஆம் திகதி வரையும், விலச்சியா நொச்சியாகம பகுதிகளில் உள்ள பாடசாலைகள் 12 வரை மூடப்படும். 2012ஆம் ஆண்டிற்கான முதலாம் தவணை குறிப்பிட்ட திகதியில் ஆரம்பிக்கப்பட்டதால் இதற்கு இடையூறு ஏற்படமாட்டாது என அவர் மேலும் தெரிவித்தார்.