Published On: Monday, January 30, 2012
புத்தளத்தில் முஸ்லிம் மீடியா போரத்தின் ஊடக கருத்தரங்கு

(புத்தளம் செய்தியாளர்)
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் ஊடக கருத்தரங்கு புத்தளம் மாவட்டத்தில் புளிச்சாக்குளத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போர தலைவர் என்.எம். அமீன் தலைமையில் '21ஆம் நூற்றாண்டின் ஊடகம்' என்ற தலைப்பில் மாணவர்களுக்கு உமர் பாரூக் மகா வித்தியாலயத்திலும் உலமாக்களுக்கு லுக்மானுல் ஹக்கீம் அரபுக் கல்லூரியிலும் இந்த ஊடக கருத்தரங்கு நடைபெற்றது. இக் கருத்தரங்கில் அஷ்ஷேக் யூசுப் முப்தியின் விசேட உரையும் இடம் பெற்றது.
மாலை நடைபெற்ற சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் எம். பீ. பாரூக், வடமேல் மாகாண சபை உறுப்பினர்களான ஏ. எச். எம். ரியாஸ், எஸ். ஏ. எஹ்யா வடமேல் மாகாண சபை முன்னாள் உறுப்பினர் எஸ். எச். எம். நியாஸ் ஆராச்சிகட்டு பிரதேச சபை உறுப்பினர்களான எஸ். நிஜாமுதீன், சீ். எம். எம். சரீப், பாடசாலை அதிபர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.