Published On: Sunday, January 29, 2012
காத்தான்குடியில் பாரிய திமிங்கிலம் கரையொதுங்கியுள்ளது
காத்தான்குடி கடற்கரையில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பாரிய திமிங்கிலமொன்று கரையொதுங்கியுள்ளது. அதிகாலை 2 மணியளவில் இத்திமிங்கிலம் கரையொதுங்கியதை அவதானித்த மீனவர்கள் காத்தான்குடி பொலிஸ் நிலையத்திற்கு தெரியப்படுத்தினர்.

16 அடி நீளமும் 5 அடி அகலமும் கொண்ட இத்திமிங்கிலத்தைக் கரைக்குக் கொண்டுவருவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு கரையொதுங்கியுள்ள திமிங்கிலத்தை மட்டக்களப்பு, காத்தான்குடி ஆகிய இடங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் சென்று பார்வையிட்டு வருகின்றனர்.

