Published On: Tuesday, January 31, 2012
15 ஆயிரம் பட்டதாரிகளில் வன்னிக்கு 300 பேர் நியமனம்

நாட்டில் வழங்கப்படவுள்ள 15 ஆயிரம் பட்டதாரிகளுக்கான நியமனங்களில் வன்னி மாவட்டத்துக்கு 300 நியமனங்களை வழங்க ஜனாதிபதி உடன்பாடு தெரிவித்துள்ளதாக வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும், கைத்தொழில், வணிகத்துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
மன்னார் மாவட்டத்தின் நானாட்டான் பிரதேச செயலகப்பிரிவில் அமைந்துள்ள நறுவிலிக்குளம் அரசினர் கலவன் பாடசாலையில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போது அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
குறிப்பாக ஆசிரியப் பற்றாக்குறையினை நிவர்த்திக்க பட்டதாரிகளை ஆசிரிய சேவைக்குள் உள்வாங்குவதற்கு நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளது. இதனடிப்பையில் மன்னார் மாவட்டத்தில் 100 பேரும் வவுனியா மாவட்டத்தில் 1000 பேரும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 100 பேரும் இதன் போது உள்வாங்கப்படவுள்ளனர்.
அதே போன்று வன்னி மாவட்டத்தினை கல்விக்கான முக்கிய பிரதேசமாகவும் மாற்றுவதற்கு தேவையான அனைத்த வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுக்க நடவடிக்கையெடுக்கப்படும் என்றும் அமைச்சர் றிசாத் பதியுதீன் கூறினார்.