Published On: Wednesday, January 18, 2012
இந்தியச் சிறையிலுள்ள 36 இலங்கை மீனவர்களுக்கு விரைவில் விடுதலை

இந்தியாவின் அந்தமான் தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 36 இலங்கை மீனவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்காது விரைவில் விடுதலை செயவதற்கான திட்டமொன்றை தயாரிப்பதற்கு இந்திய அதிகாரிகள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.
அண்மையில் இரண்டு நாடுகளுக்கும் இடையில் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு அமைய இந்த திட்டம் முன்னெடுக்கப்படுவதாக கடற்றொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த நடவடிக்கை காரணமாக தற்போது இந்தியாவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள 36 இலங்கை மீனவர்களும் 13 படகுகளும் விரைவில் விடுவிக்கப்படவுள்ளதாக கடற்றொழில் அமைச்சு மேலும் அறிவித்துள்ளது.