Published On: Wednesday, January 18, 2012
இலக்கங்களை மாற்றி லொத்தர் பரிசு பெற முயன்றவர் கைது

இங்கிரிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் வைத்து போலி லொத்தர் சீட்டினை சமர்ப்பித்து தனது பரிசிலை பெற்றுக்கொள்ள இந்நபர் முயற்சித்த போதே இங்கிரிய பொலிஸ் குற்றப்புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் குறித்த நபரை பின்தொடர்ந்து சென்று மடக்கிப் பிடித்து கைதுசெய்திருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
இதேவேளை குறித்த லொத்தர் சீடடினை மாற்றியமைக்க பயன்படுத்திய கணனி மற்றும் மேலும் பல உபகரணங்களையும் பொலிஸ் குற்றப்புலனாய்வு அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். இதேபோன்று வேறு போலி லொத்தர் சீட்டுக்கள் மூன்று குறித்த இடத்திலிருந்து கிடைக்கப் பெற்றிருப்பதாகவும் பொலிஸ் பேச்சாளர் கூறினார்.
சந்தேக நபர் ஹொரணை மஜிஸ்திரேட்டில் நேற்றைய தினமே ஆஜர்படுத்தப்பட்டார். இங்கிரிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.