Published On: Wednesday, January 11, 2012
புத்தளத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் ஊடக கருத்தரங்கு

(புத்தளம் செய்தியாளர் )
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் புத்தளம் தொகுதியிலுள்ள புளிச்சாக்குளத்தில் ஊடக கருத்தரங்கொன்றை எதிர்வரும் 28ஆம் நடாத்த ஏற்பாடுகளை செய்துள்ளது.
புளிச்சாக்குள பிரதேச மாணவர்களுக்கு உமர் பாரூக் மகா வித்தியலயத்திலும் உலமாக்களுக்கும் லுக்மானுல் ஹக்கீம் மத்ரஸா விலும் வெவ்வேறாக இந்த ஊடகக் கருத்தரங்கு நடாத்தப்படவுள்ளது. காலை 8 மணிக்கு ஆரம்பமாகும் இக்கருத்தரங்கில் 60 மாணவர்களும் 20 உலமாக்களும் கலந்துகொள்ள உள்ளனர்.
மாலை 3.30 மணிக்கு சான்றிதழ் வழங்கும் வைபவம் இடம்பெறவுள்ளது. ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம். அமீன் தலைமையில் ஊடகக்கருத்தரங்கும் சான்றிதழ் வழங்கும் வைபவமும் நடைபெற ஏற்பாடாகியுள்ளது.