Published On: Wednesday, January 18, 2012
கொம்டெக் கல்வி நிலையத்தின் புலமைப்பரிசில் திட்டம்
(யு.கே.காலித்தீன்)
2011ஆம் ஆண்டில் க.பொ.த. சாதாரணதர பரீட்சை எழுதிய மாணவர்களுக்கு கொம்டெக் கல்வி நிலையம் வழங்கும் புலமைப்பரிசில் திட்டத்தின்கீழ் 250க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு இலவச கணணி மற்றும் ஆங்கிலப்பயிற்சி பாடநெறியினை ஆரம்பிக்கும் நிகழ்வு கொம்டெக் கல்வியகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வின்போது பிரதம அதிதியாக கொம்டெக் கல்வியகத்தின் பணிப்பாளர் நாயகமும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான ஏ.எம்.ஜெமீல் கலந்து கொண்டு மாணவர்களுக்கு புலமைப்பரிசில் அட்டையினை வழங்கிவைத்தார்.