Published On: Friday, January 13, 2012
இலங்கை அணி 258 ரன் வித்தியாசத்தில் படுதோல்வி

தென் ஆப்ரிக்க அணியுடனான முதல் ஒருநாள் போட்டியில், இலங்கை அணி 258 ரன் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. போலண்ட் பார்க் மைதானத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த இப்போட்டியில், டாசில் வென்று முதலில் பேட் செய்த தென் ஆப்ரிக்கா 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 301 ரன் குவித்தது. தொடக்க வீரர் அம்லா 112, காலிஸ் 72, டிவில்லியர்ஸ் 52, அல்பி மார்கெல் 25 ரன் எடுத்தனர். மலிங்கா 5 விக்கெட் வீழ்த்தினார்.
அடுத்து களமிறங்கிய இலங்கை அணி 20.1 ஓவரில் 43 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. கோசல குலசேகரா அதிகபட்சமாக 19 ரன் எடுத்தார். மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்னில் வீழ்ந்தனர். தரங்கா, கேப்டன் தில்ஷன், மேத்யூஸ், பெர்னாண்டோ ஆகியோர் டக் அவுட் ஆனார்கள். மார்னி மார்கெல் 4, சோட்சோபி 3, ராபின் பீட்டர்சன் 2, ஸ்டெயின் ஒரு விக்கெட் வீழ்த்தினர். மார்னி மார்கெல் ஆட்டநாயகன் விருது பெற்றார். 2வது ஒருநாள் போட்டி கிழக்கு லண்டன் மைதானத்தில் நாளை நடக்கிறது.
u இலங்கை அணியின் மிகப் பெரிய தோல்வியாக (258 ரன் வித்தியாசம்) இது அமைந்தது. முன்னதாக ஆஸி.க்கு எதிராக (1985) 232 ரன் வித்தியாசத்தில் தோற்றுள்ளது.
u 43 ரன்னில் ஆல் அவுட் ஆனது, அந்த அணியின் குறைந்தபட்ச ஸ்கோராகும். (ஒருநாள் வரலாற்றில் 4வது குறைந்தபட்சம்; ஜிம்பாப்வே 35, கனடா 36, ஜிம்பாப்வே 38, பாகிஸ்தான்/இலங்கை 43).
u இலங்கை அணி 9வது முறையாக 100 ரன்னுக்குள் சுருண்டுள்ளது.