Published On: Sunday, February 19, 2012
முதலமைச்சர் வேட்பாளர் தெரிவில் கூட்டமைப்புக்குள் அமளிதுமளி

வடமாகாண சபை தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளர் தெரிவில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் களிடையே கடும் போட்டி நிலவிவருகிறது. குறிப்பாக மாவை சேனாதிராஜா எம்.பி.க்கும், சுரேஷ் பிரேமச்சந்திரன் எம்.பி.க்குமிடையே கடுமையான போட்டி காணப்படுகிறது.
இதனால் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கு பெரும் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. ஒருவரை ஆதரித்தால் மற்றவருடன் பகைத்துக்கொள்ள நேரிடும் என்பதால் அவர் மெளனம் சாதித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதனிடையே இவர்களது போட்டியைப் பாவித்து மூன்றாவது நபர் ஒருவர் தான் முதலமைச்சர் வேட்பாளராக வருவதற்கு முனைந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.