Published On: Saturday, February 11, 2012
'துருவம்' இணையத்தளத்தின் மாபெரும் மீலாதுன் நபி விழா
.jpg)
(றிம்ஸான்)
துருவம் இணையத்தளத்தின் சாய்ந்தமருது கிளை அலுவலகத்தில் இன்று சனிக்கிழமை மாபெரும் மீலாதுன் நபிவிழாக் கொண்டாட்டம் நடைபெற்றது. முஹம்மது நபி (ஸல்) அவர்களின் பிறந்த தினத்தையொட்டி துருவம் இணையத்தளத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் சாய்ந்தமருது, ஹல்லாஜியா மத்ரஸா மாணவர்கள் கலந்து சிறப்பித்தனர்.மத்ரஸா அதிபரின் தலைமையின் கீழ் நடைபெற்ற இந்நிகழ்வில், துருவம் ஆசிரியர் குழுவினர் உட்பட பல ஊர் பிரமுகர்களும் கலந்துகொண்டனர். மேற்படி நிகழ்வில், மத்ரஸா மாணவர்களின் மார்க்க சம்பந்தமான நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. அத்துடன் தற்போது மருவிவரும் இஸ்லாமியப் பாரம்பரிய 'பொல்லடி' நிகழ்வு இடம்பெற்றதும் குறிப்பிடத்தக்கது.
இந்த மீலாதுன்நபி தின நிகழ்வில் மாணவர்கள் வீதிகளில் ஊர்வலம் வந்தனர். இந்நிகழ்வில் கலந்துகொண்ட மாணவர்களுக்கு சிற்றுண்டிகளும் வழங்கப்பட்டன.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)