Published On: Saturday, February 25, 2012
குருநாகலில் பராக் ஒபாமாவின் கொடும்பாவி எரிப்பு
இம்மாதம் ஜெனீவாவில் நடைபெற விருக்கும் ஐ.நா. மனித உரிமைகள் கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்படுவதைக் கண்டித்து, நேற்று வெள்ளிக்கிழமை குருநாகலில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது. குருநாகல் மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளர் அப்துல் சத்தார் தலைமையில் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. குருநாகல் மாவட்ட முஸ்லிம் அமைப்புக்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இவ்வார்ப்பாட்டம், குருநாகல் பெரிய ஜும்மா பள்ளி தொழுகை முடிந்ததுடன் ஆரம்பமாகிய ஆர்ப்பாட்டத்தில் அமெரிக்கா ஜனாதிபதி பராக் ஒபாமாவின் கொடும்பாவிப் பதாதை தீயிட்டு எரிக்கப்பட்டது.


