எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய 'துருவம்' செய்திகளை உடனுக்குடன் உங்களது கையடக்கத் தொலைபேசியில் இலவசமாக பெற்றுக்கொள்ள "Follow thuruvam" என டைப் செய்து 40404 க்கு அனுப்புங்கள்.
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Thuruvam
துருவம்
செய்திகள் • உடனுக்குடன்
THURUVAM
NEWS
MENU
Published On: Friday, February 24, 2012

சிவில் பாதுகாப்பு உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கல்

Print Friendly and PDF


(நப்றிஸ்) 
கல்முனை பிரதேச செயலகத்திற்குட்பட்ட கல்முனைக்குடி கிராம சேவகர் பிரிவுகளில் தெரிவு செய்யப்பட்ட சிவில் பாதுகாப்பு குழு உறுப்பினர்களுக்கான அடையாள அட்டை வழங்கும் நிகழ்வு கல்முனை பொலிஸ் நிலையத்தில் அண்மையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பொலிஸ், பொதுமக்கள் தொடர்பாடல் பிரிவு பொறுப்பதிகாரி எஸ்.ஐ. ஆரியரத்ன, பொதுமக்கள் தொடர்பாடல் பிரிவு உதவி பொலிஸ் சார்ஜன் ஏ.எல். நபீல் மற்றும் கல்முனைக்குடி 1-5 ஆம் கிராம சேவகர் பிரிவுகளின் சிவில் பாதுகாப்பு குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

கல்முனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி டீ.யி.ஜே.பி. நாணயக்கார தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் உரை நிகழ்த்திய பொதுமக்கள் தொடர்பாடல் பிரிவு சார்பாக உதவி பொலிஸ் சார்ஜன் ஏ.எல். நபீல் இங்கு உரையாற்றும்போது, முன்பு இந்த அடையாள அட்டைகள் வழங்கப்படடிருந்தும் ஒருசிலர் அதனை தவறாக பயன்படுத்தியிருந்தமை காரணமாகவே அவர்களை நீக்கிவிட்டு, அதனை புதிய வடிவில் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனை யாரும் தவறாகப் பயன்படுத்தி விடக்கூடாது. அத்துடன் எமது பொலிஸாருடன் இணைந்து சட்டமும் ஒழுங்கும் நிலை நாட்டப்பட அனைவரும் சேவையாற்ற முன்வர வேண்டும். மாறாக தவறுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதோடு அடையாள அட்டையும் பறிமுதல் செய்யப்படும் என்று கூறினார்.


Related News
1 | 2 | 3 | 4 | 5 | 6 | Next »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »

இணையத்தளங்கள்

Sign Up to Thuruvam Newsletter

© 2012 Thuruvam All Rights Reserved.
|
Call us on ( +94 ) 71 35 45 452