Published On: Friday, February 24, 2012
முந்தல் பிரதேசத்தில் கடத்தப்பட்ட முன்பள்ளி சிறுமி மீட்பு

(புத்தளம் செய்தியாளர்)
புத்தளம், முந்தல் பிரதேசத்தில் கடத்தப்பட்ட முன்பள்ளி சிறுமி இன்று மீட்கப்பட்டுள்ளதோடு கடத்தலில் தொடர்புபட்ட சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த புதன்கிழமை இடம்பெற்ற இந்த கடத்தல் சம்பவம் தொடர்பாக பொலிஸில் முறைப்பாடு செய்ததையடுத்து பொலிஸார் விசேட தேடுதல் வேட்டையை மேற்கொண்டனர். சிறுமியைக் கடத்தியவர்கள் 50 இலட்சம் ரூபாய்களை கப்பமாக கோரினர். பள்ளம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மண்டலான பிரதேசத்தில் சந்தேக நபரும் கடத்தப்பட்ட சிறுமி மற்றுமொறு பெண்ணும் மோட்டார் வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது பொலிஸார் அவர்களை இன்று கைதுசெய்துள்ளனர். கைதுசெய்யப்பட்டவர்கள் மேலதிக விசாரணைக்காக முந்தல் பொலிஸில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

