Published On: Friday, February 24, 2012
முருகன் கோவிலில் மண் சோறு சாப்பிட்ட அ.தி.மு.க.

(இந்தியாவிலிருந்து சாஹுல் ஹமீது)
முதல் அமைச்சர் ஜெயலலிதா பிறந்த நாளை தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினர் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். கோவில்களில் விசேஷ பூஜைகள் நடத்தி ஏழைககளுக்கு அன்னதானம் வழங்கினார்கள். பல்வேறு இடங்களில் ஜெயலலிதா நீடுழி வாழ வேண்டி பால்குடம் எடுத்தனர். திருச்சி ஜங்ஷன் பகுதியில் உள்ள வழிவிடும் முருகன் கோவிலில் ஜங்ஷன் பகுதி முன்னாள் பொருளாளர் ஒத்தக்கடை செந்தில் தலைமையில் அ.தி.மு.க.வினர் மண் சோறு சாப்பிட்டனர். ஏர்போர்ட் பகுதி பாசறை செயலாளர் பாலு, ஓலையூர் விஜி, மகேந்திரன், குமார், கண்ணன், வினோத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

