Published On: Tuesday, February 28, 2012
நேற்று புத்தளம் நுரைச்சோலைகளில் ஆர்ப்பாட்டம்

( புத்தளம் செய்தியாளர் )நேற்று ஜெனீவாவில் கொண்டுவரப்படவுள்ள இலங்கைக்கு எதிரான குற்றச் சாட்டுக்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து புத்தளம் மற்றும் நுரைச்சோலை நகரங்களில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் இடம் பெற்றன.
புத்தளம் நகரில் புத்தளம் நகர சபை தலைவர் கே. ஏ. பாயிஸ் தலைமையில் நடைபெற்ற எதிரப்பு ஆர்ப்பாட்டத்தில் வடமேல் மாகாண சபை உறுப்பினர்களான என். டீ. எம். தாஹிர் சிந்தக மாயாதுன்ன உட்பட உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களும் பங்குபற்றினர்.
நுரைச்சோலையில் நடைபெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் பாராளுமன்ற உறுப்பினர் விக்டர் என்டனி தலைமையில் நடைபெற்றது.
வடமேல் மாகாண சபை உறுப்பினர்களான ஏ. எச். எம். ரியாஸ், எஸ். ஏ. எஹ்யா, கல்பிட்டி பிரதேச சபை தலைவர் எம். எச். எம். மின்ஹாஜ் உட்பட உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.




