சர்வோதயம் அமைப்பின் அனுசரணையுடன் சிங்கள மொழி பயிற்சி வகுப்பு
சர்வோதயம் அமைப்பின் அனுசரணையுடன் ஏற்பாடு செய்யப்பட்ட சமய தலைவர்களுக்கான சிங்கள மொழி பயிற்சி வகுப்பு நேற்று ஞாயிற்றுக்கிழமை கிண்ணியா அல் அக்ஸா கல்லூயில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
சமயங்களுக்கிடையிலான சமூக வலுவூட்டல் மற்றும் சமூதாய அபிவிருத்திக்கான செயற்றிட்டத்தின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வு திருகோணமலை மாவட்ட சர்வ மத முஸ்லிம் பிரிவின் தலைவர் மௌலவி எம்.வை. ஹதியத்துள்ளா தலைமையில் நடைபெற்றது.
சமயத்தலைவர்கள் பலர் இதில் கலந்து கொண்டு பயன் பெறுகின்றனர்.