Published On: Wednesday, February 29, 2012
'பேத்திக்காக' வைரமுத்து எழுதிய பாடல்

உலகமே மழைப்பொழிவை மெல்ல மெல்ல இழந்து வரும் வேளையில், தமிழகம் தன் குறைந்தபட்ச தண்ணீர் தேவைக்காக, பக்கத்து மாநிலங்களை நம்பியிருக்க வேண்டியிருக்கிறது. இதை கருவாக வைத்து, ஒண்டிப்புலி என்ற படம் தயாராகி வருகிறது.
இந்த படத்தின் கதைப்படி, முல்லைப்பெரியார் அணையை கட்டிய பென்னி குயிக்கின் பேத்தி தமிழ்நாட்டுக்கு வருவது போலவும், அவர் இங்கே ஒரு இளைஞர் மீது காதல்வசப்படுவது போலவும் காட்சிகள் வருகின்றன.
பென்னி குயிக் பேத்தியின் காதலுக்காக, கவிஞர் வைரமுத்து ஒரு வசீகரமான பாடலை எழுதியிருக்கிறார். இதுதவிர, இந்த படத்துக்காக மேலும் 4 பாடல்களையும் அவர் எழுதியிருக்கிறார். ஜேம்ஸ் வசந்தன் இசையமைக்கிறார்
கதை, திரைக்கதை, வசனம் எழுதி, டைரக்டு செய்கிறார், பி.ராஜகுரு. ஒளிப்பதிவு, விஜய் ஆம்ஸ்ட்ராங்க். படத்தின் 80 சதவீத காட்சிகள் தூத்துக்குடி, ராமநாதபுரம், கன்னியாகுமரி, திருநெல்வேலி, மதுரை ஆகிய மாவட்டங்களிலும், அதைச்சுற்றியுள்ள பகுதிகளிலும் படமாக்கப்பட்டுள்ளன.
பி.எஸ்.ஸ்டூடியோ தயாரிக்கும் இந்த படத்தில் செல்வின் கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக ஜெர்மன் நாட்டை சேர்ந்த எலீனா ஹசன் நடித்து வருகிறார். இவர்களுடன் பொன்வண்ணன், ஜி.எம்.குமார், செவ்வாழை ராஜ், பருத்தி வீரன் சுஜாதா, பிரகதீஸ்வரன், வடிவேல் கணேசன் ஆகியோரும் நடிக்கிறார்கள்.