எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய 'துருவம்' செய்திகளை உடனுக்குடன் உங்களது கையடக்கத் தொலைபேசியில் இலவசமாக பெற்றுக்கொள்ள "Follow thuruvam" என டைப் செய்து 40404 க்கு அனுப்புங்கள்.
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Tuesday, February 07, 2012

பண்டிகையில் பெரிய நடிகர்களின் படங்கள்

Print Friendly and PDF


பெரும்பாலான தியேட்டர்களில் பெரிய நடிகர்களின் படங்கள் ஆக்கிரமிப்பதால், சிறு பட்ஜெட் படங்கள் வெளியாகாமல் முடங்கி வருகின்றன. இதனை தடுக்கும் பொருட்டு, இனி பண்டிகை நாட்களில் மட்டுமே பெரிய நடிகர்கரின் படங்களை ரிலீஸ் செய்வதென்று தயாரிப்பாளர்கள் சங்கம் முடிவெடுத்துள்ளது.

இனிமேல் பொங்கல், ஏப்ரல் 14, மே 1, ஆகஸ்ட் 15 மற்றும் தீபாவளி ஆகிய தினங்களில் மட்டுமே பெரிய நடிகர்களின் படங்கள் மட்டுமே வெளியாகும் என அறிவித்தது.  இதனால்  ' 3 ',  'சகுனி', 'பில்லா 2' உள்ளிட்ட படங்கள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.  

இதனால் விநியோகஸ்தர்கள் கவலைப்பட ஆரம்பித்துள்ளனர். குறிப்பிடப்பட்ட நாட்களில் மட்டுமே பெரிய நடிகர்கள் படங்கள் வெளியானால் கடும் போட்டி ஏற்படும் என்பதால் பெரிய நடிகர்கள் படங்கள் வெளியாவதற்கு கூடுதல் நாட்கள் ஒதுக்க வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கத்தினை கேட்டுக் கொண்டது.

இதனை கருத்தில் கொண்டு, தயாரிப்பாளர் சங்கம்  பெரிய நடிகர்கள் படங்கள் வெளியாக குறித்த நாட்களை,   5 நாட்களில் இருந்து 8 நாட்களாக அதிகரித்துள்ளது.

அந்த 5 நாட்களோடு, மார்ச் முதல் வாரம், ஜுன் முதல் வாரம் மற்றும் டிசம்பர் இரண்டாம் வாரம் ஆகிய நாட்களை இணைந்துள்ளது.

தயாரிப்பாளர் சங்கத்தின் இந்த முடிவால், தயார் நிலையில் உள்ள ' 3 ' மற்றும் சகுனி ஆகிய படங்கள் தங்களது வெளியிட்டு தேதியை விரைவில் அறிவிக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Related News
1 | 2 | 3 | 4 | 5 | 6 | Next »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »

இணையத்தளங்கள்

Sign Up to Thuruvam Newsletter

© 2012 Thuruvam All Rights Reserved.
|
Call us on ( +94 ) 71 35 45 452