Published On: Thursday, February 16, 2012
சிலாபத்தில் சுமூக நிலை; ஊரடங்குச் சட்டம் தளர்வு

எரிபொருள் விலை அதிகரிப்புக்கு நேற்று சிலாப மீனவர்களினால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது காவல்துறையினர் கண்ணீர்புகை பிரயோகம் மேற்கொண்டனர். பின்னர் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தின்போது மீனவர் ஒருவர் பலியானார். இதற்கிடையில் நேற்றைய தினம் சிலாபம் நகரப் பகுதியில் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டம் தற்போது தளர்த்தப்பட்டுள்ளது.
பிரதேசத்தின் பாதுகாப்பு மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், அங்கு தற்போது சுமூக நிலை ஏற்பட்டுள்ளதாகவும், காவற்துறை ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார்.