Published On: Saturday, February 25, 2012
பிறந்தநாளை முன்னிட்டு புகைப்படக் கண்காட்சி
(இந்தியாவிலிருந்து சாஹுல் ஹமீது)
தமிழக முதலமைச்சரின் 64வது பிறந்த நாளை முன்னிட்டு 30 மாவட்டங்களில் அரசு சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி நடைபெற்றது. இப்புகைப்படக் கண்காட்சியினை மாவட்ட அமைச்சர்கள் பங்கேற்று திறந்து வைத்தார்கள். செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் இப்புகைப்படக் கண்காட்சி 30 மாவட்டங்களில் மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்தப் புகைப்படக் கண்காட்சியில் தமிழக முதலமைச்சர் நாட்டுக்கு உழைத்த தலைவர்களுடன் உள்ள அரிய புகைப்படங்கள் தமிழக முதலமைச்சர் பங்கேற்ற அரசு விழாக்கள் கலந்துகொண்ட நிகழ்ச்சிகள், அரசு நலத்திட்ட உதவிகள் வழங்குதல் போன்ற அரசு சாதனை விளக்க புகைப்படங்கள் இக்கண்காட்சியில் இடம் பெற்றிருந்தது.

சென்னையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இப்புகைப்படக் கண்காட்சியினை சட்டப்பேரவைத் தலைவர் டி. ஜெயக்குமார் , திண்டுக்கல்லில் மின்சாரத் துறை அமைச்சர் நத்தம் ஆர். விசுவநாதன், கிருஷ்ணகிரியில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.பி. முனுசாமி , தஞ்சாவூரில் வீட்டுவசதித் துறை அமைச்சர் ஆர். வைத்திலிங்கம், விழுப்புரத்தில் வணிகவரி துறை அமைச்சர் சி.வி. சண்முகம், கோயம்புத்தூரில் வேளாண்மைத் துறை அமைச்சர் செ. தாமோதரன், மதுரையில் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே. ராஜூ, கன்னியாகுமரியில் வனத்துறை அமைச்சர் கே.டி. பச்சைமால், கடலூரில் ஊரக தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், நாமக்கல்லில் தொழில்துறை அமைச்சர் பி. தங்கமணி மற்றும் சட்டப்பேரவைத் துணைத் தலைவர் பி. தனபால், சிவகங்கையில் சுற்றுலாத் துறை அமைச்சர் எஸ். கோகுலஇந்திரா, கரூரில் போக்குவரத்துத் துறை அமைச்சர் வி. செந்தில்பாலாஜி, நாகப்பட்டினத்தில் மீன்வளத்துறை அமைச்சர் கே. ஜெயபால், திருச்சிராப்பள்ளியில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் என்.ஆர். சிவபதி, விருதுநகரில்செய்தி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி, வேலூரில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் வி.எஸ். விஜய் .
ஈரோட்டில் மேயர் மற்றும் துணை மேயர் சேலத்தில் மேயர் திருப்nullரில் வணக்கத்திற்குரிய மேயர் மற்றும் துணை மேயர் அரியலூர், காஞ்சிபுரம், புதுக்கோட்டை, இராமநாதபுரம், தேனி, திருவள்ளூர், திருவண்ணாமலை, திருவாரூர், ஆகிய மாவட்டங்களில் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் திறந்து வைத்தார்கள். அமைச்சர்கள் கலந்துகொண்ட மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்கள் கலந்துகொண்டு சிற்பித்தனர். மேலும், நாடாளுமன்ற, சட்டமன்ற, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளும், அந்தந்த மாவட்டங்களில் உள்ள பொதுமக்களும் பெருந்திரளாக கலந்துகொண்டு பார்வையிட்டனர்.

