Published On: Tuesday, February 07, 2012
அட்டாளைச்சேனையில் உடற்பயிற்சி நிலையம் திறப்பு
(அமைச்சின் ஊடகப் பிரிவு)
அட்டாளைச்சேனை யங் லயன்ஸ் விளையாட்டு கழகத்தின் முயற்சியினால் உடற் பயிற்சி நிலையம் ஒன்று திறந்து வைக்கப்பட்டது. யங் லயன்ஸ் விளையாட்டு கழக தலைவர் ஏ.எம்.எம்.நஜீப் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசனம், வீடமைப்பும் நிர்மாணமும் கிராமிய மின்சாரம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை கலந்து கொண்டார்.
கௌரவ அதிதிகளாக அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனிபா, அக்கரைப்பற்று வலயக் கல்வி பணிப்பாளர் ஏ.எல்.எம். ஹாசிம் மற்றும் அட்டாளைச்சேனை அனைத்து பள்ளிவாயல் தலைவரும், ஜும்மா பள்ளி தலைவருமான அல்ஹாஜ் எஸ்.எல்.ஏ.றசீட், அட்டாளைச்சேனை தவிசாளர் ஏ.எல்.எம்.நசீர் ஆகியோருடன் அட்டாளைச்சேனை பிரதேச விழையாட்டுகழக வீரர்கள், பிரதேச விளையாட்டு உத்தியோகத்தர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.