Published On: Tuesday, February 14, 2012
எரிபொருட்களின் விலையை அடுத்து மின் கட்டணமும் அதிகரிக்கும்

எரிபொருட்களின் விலை அதிகரிப்பினைத் தொடர்ந்து மின் கட்டணமும் அதிகரிப்படலாம் என்று மின்சக்தி, வலுசக்தி அமைச்சு அறிவித்துள்ளது. மின்சார சபைக்கு இந்த வருடம் 30 பில்லியன் ரூபா நஷ்டம் ஏற்படுமென எதிர்வு கூறப்பட்டுள்ளது. தற்போது எரிபொருட்களின் விலையும் அதிகரித்துள்ளதனால், இந்நஷ்டம் மேலும் 40 மில்லியன் ரூபாவாக அதிகரிக்கும் என்று மின்சக்தி, வலுசக்தி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
பிண்ணினைப்பு: மின்சாரம் நுகர்வோர் 120 அலகுகளுக்கு குறைந்தது 25 சதவீதம் மேலதிக கட்டணமாக செலுத்தவேண்டும். தொழில்துறைக்கு 15 சதவீதம் மேலதிக கட்டணமாக செலுத்தவேண்டும்.